குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக இருந்த சரஸ்வதி மற்றும் துரைராஜ், முரளி குமார் உள்ளிட்ட உறுப்பினர்களை நீக்கி கடந்த பிப்ரவரியில் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தொடரப்பட்ட வழக்கில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நீக்கம் சட்டவிரோதம் என கூறி அரசின் உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து தமிழக […]
