தமிழகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்காக பல திட்டங்களை செயல்படுத்த கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சமூக நலத்துறை சார்பாக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது. கொரோனா காலகட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் வைப்புத்தொகை, பட்டப்படிப்பு வரை கல்விக்கட்டணம் போன்றவற்றை அரசே மேற்கொள்ளும் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் இதன் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைவர் உட்பட 6 பேர் கொண்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டதற்கான அரசாணையை ரத்து செய்து […]
