ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக பெற்றோரை இழந்த குழந்தைகள், எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மிஷன் வாட்சாலயா திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகின்றது. […]
