சிறு தேயிலை விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி தாலுகாவுக்கு உட்பட்ட கட்டபெட்டு அருகே இருக்கும் ஒன்னதலை கிராமத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கான விழிப்புணர்வு கூட்டமானது தலைவர் லிங்கனின் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற தேயிலை வாரிய உதவி இயக்குனர் செல்வம் பேசியதாவது, விவசாயிகளுக்கு மானிய விலையில் தேயிலை வாரியம் மூலமாக கவாத்து வெட்டும் இயந்திரம், இலை பறிக்கும் இயந்திரம் ஆகியவை வழங்கப்படுகின்ற நிலையி ல் சுய உதவிக்குழுவினர் அதை வாங்கி பயன்பெற […]
