நியூசிலாந்தில் ஏலத்தில் வாங்கிய பெட்டிக்குள், இறந்து பல ஆண்டுகளாக அழுகிக்கிடந்த குழந்தைகளின் சடலங்களை சோதனை செய்ததில், அவர்கள் யார் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆக்லாந்திற்கு அருகே கைவிடப்பட்ட பொருட்களுக்கான ஏலத்தில், டிரெய்லர் நிறைய இருந்த பொருட்களுடன் சூட்கேஸ் ஒன்று இருந்தது. அதனை விலைகொடுத்து வாங்கிய குடும்பம், அதனை திறந்து பார்த்த போது சடலங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் சடலங்கள் மீட்கப்பட்டதிலிருந்து நாட்டையே உலுக்கிய மரணங்கள் […]
