உலகிலேயே குள்ளமான பசுவை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதுகின்றது. வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து சாரிகிராம் என்ற பகுதி 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ஷிகோர் என்பவர் வேளாண் பண்ணை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் உலகிலேயே குள்ளமான பசு ஒன்று உள்ளது. அந்த பசுவிற்கு ராணி என பெயர் சூட்டியுள்ளனர். இந்தப் பசுவின் உயரம் மற்றும் எடையானது 50 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 26 கிலோகிராம் ஆகும். […]
