காலாவதியான குளிர்பானங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். உணவு பாதுகாப்பு சட்டங்களை பின்பற்றி உணவு தயாரிப்பு நிலையங்கள் செயல்படுகிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் வி.எம் சத்திரத்தில் உள்ள குளிர்பானம் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சங்கரலிங்கம் […]
