குளியலறையில் வழுக்கி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாலைபுதூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாறு பஜாரில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணம் நடந்து 12 வருடம் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மீனா குளியலறையில் எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த மீனாவை அவரது உறவினர்கள் உடனடியாக […]
