ஆற்றிற்கு குளிக்கச் சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் என்ஜினீயரான முகமது முபாரிஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகமது முபாரிஸூக்கும் சேதுக்கு வாய்த்தானை பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முகமது முபாரிஸ் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது மாமியார் வீட்டிற்கு மனைவியுடன் சென்றுள்ளார். இதனையடுத்து முகமது முபாரிஸ், மனைவி மற்றும் அவரின் குடும்பத்தாருடன் […]
