சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலுக்கு கோவில் திருவிழாவிற்கு வந்த சிறுவன் குளத்து நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக தேவகோட்டை தலுதனூர் கிராமத்தில் வசித்து வரும் கண்ணனும், அவருடைய மகன் சபரி சித்துவும் (11) வந்துள்ளனர். அங்கு சபரி சித்து தனது நண்பர்களுடன் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் குளத்து நீரில் […]
