குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிங்கீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அந்த கும்பாபிஷேக திருப்பணியில் ரவி ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் ரவி கோவில் அருகில் உள்ள ஒரு குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
