குளத்தில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலவிநாயகம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாலவிநாயகம் அவரது நண்பருடன் நாசரேத் வெள்ளரிக்காயூரணி புதுகுளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலவிநாயகம் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர் நீச்சல் தெரியாததால் கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அருகிலிருந்த […]
