கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல் தொகுதி கடல் சார்ந்த பகுதி ஆகும். பண்டைய காலத்தில் துறைமுக நகரமாக விளங்கிய குளச்சல் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்படும் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்தது. குளச்சல் மற்றும் முட்டம் கடற்கரைகள் சுற்றுலாத் தளமாக விளங்குகிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலையாக கருதப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மிகப் பழமைவாய்ந்த இரணியல் அரண்மனை இங்குதான் அமைந்துள்ளது. குளச்சல் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா தளம் மற்றும் […]
