எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீனா மேற்கொள்ளும் கட்டுமானத்துக்கு பதிலடியாக, கிழக்கு லடாக்பிரிவில் இந்தியா உள் கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது. லடாக்கில் சென்ற 2020ம் வருடம் மேமாதம் மோதலில் ஈடுபட்ட பிறகு, எல்லையில் இந்திய ராணுவமானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிழக்கு லடாக்கில் சீன அபகரிப்பை சமாளிப்பதற்கு இந்தியா 50,000-க்கும் அதிகமான படைகளை நிலைநிறுத்தியுள்ளது. மேலும் அதிக எண்ணிக்கையிலான புது உபகரணங்களையும் நிறுத்தி இருக்கிறது. ராணுவ வீரர்கள் தூய குடிநீரைப் பெற, இந்திய ராணுவம் பெரும்பாலான குளங்களை […]
