கோவில் தேர் மீது அமர்ந்து இருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி இ.பி. காலனியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 10ஆம் தேதி சித்திரை திருவிழா பூச்சாற்றுதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று சாமி தேரில் வைத்து வீதி வீதியாக வலம் வந்தனர். இவர்களுடன் மின்வாரிய ஊழியர் கேங்மேன் குமரேசன் என்பவரும் தேரில் அமர்ந்து மின்சார வயர்களை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது […]
