சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையை தரம் பிரிக்கும் போட்டி துவக்கவிழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்று “என் குப்பை எனது பொறுப்பு” என்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் எனும் போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். இதையடுத்து மேயர் தன் வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்த தன் புகைப்படங்களை இப்போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். […]
