தடுப்பூசி போடுபவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக 1 கிராம் தங்கமும், இரண்டாம் பரிசாக 2000 மதிப்புள்ள வெள்ளி விளக்குகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானி தாலுகாவில் வசிக்கும் பொதுமக்கள் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு இரண்டு சென்ட் அளவு உள்ள இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். […]
