காங்கிரஸ் கட்சியில் அவருக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் அண்மையில் விலகினார். ஆகஸ்ட் 26 இல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும் அவர் ஏற்கனவே சொல்லியிருந்தார். இந்நிலையில் தற்போது ”ஜனநாயக ஆசாத் கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
Tag: குலாம் நபி ஆசாத்

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் கட்சியின்அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் கட்சியில் இருந்து விலகினார் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் மேலிடத்தில் மீதான அதிருப்தி தலைவர்கள் அணி 23 பேரில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர் ஆவார். ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சராகவும், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்தவர் […]

காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளமான டுவிட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிவுரை படி வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83,065ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.46 லட்சம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3.08 லட்சம் ஆக உள்ளது. அதில் இந்தியாவில் மட்டும் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அனைத்து எதிர்கட்சிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய மோடி, முழு உலகமும் தற்போது கரோனாவின் கடுமையான […]