சென்னை அண்ணாசாலையில் குண்டுவீச்சு தொடர்பாக 6 பேர் தாம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அடுத்தடுத்து வீசப்பட்ட இரண்டு குண்டுகளும் வெடித்து புகை கிளம்பியதால் பெரும் பதட்டம் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்த […]
