நெல்லையில் உணவு பொருட்களை பதுக்கியதாக திமுக ஒன்றிய செயலாளர் ஜெகதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டும் வெளியே வரவும், தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். குறிப்பாக வருமானம் இன்றி தவித்து வரும் இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் […]
