சென்னையில் நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பத்துக்கும் கீழ் குறைந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் சுகாதாரத்துறை உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில் கொரோனா மூன்றாவது அலைக்கு பிறகு நோய் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்துக்கு கீழ் குறைந்துள்ளது. இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை […]
