மத்திய பிரதேசத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அங்கு உள்ள கிராமத்திற்குச் சென்று 50 அடி உயரத்தில் ஏறிய நிகழ்வு அங்குள்ள மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தியது மத்திய பிரதேசம் மாநிலம் பிரடாப்கர் மாவட்டத்தில் உள்ள அம்கோ கிராமத்திற்கு அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் பரஜேந்திர சிங் அவர்கள் வந்திருந்தார்.அப்போது அங்குள்ள கிராம மக்களை சந்தித்தார் அவர்கள் தினமும் சந்தித்து வரும் பிரச்சனைகள் மற்றும் குறைகளை பற்றி கேட்டறிந்தார் முக்கிய பிரச்சினைகளை உடனே தீர்ப்பதாகவும் வாக்களித்த அமைச்சர் அதற்கு உண்டான வேலையில் ஈடுபட்டுள்ளார். […]
