மாநகராட்சி அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒன்று நடைபெற்றது. அப்போது ஆணையாளர் கிறிஸ்துராஜ் இந்த முகாமிற்கு தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்றார். இதில் ஓய்வூதியம், பணி நியமனம், சாலை அமைத்தல், சாக்கடை கால்வாய் தூர்வாருதல் போன்ற கோரிக்கை அடங்கிய மனுக்களை பெற்றுக்கொண்ட ஆணையாளர் கிறிஸ்துராஜ் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் கூறினார். இதனையடுத்து ஆணையாளர் கிறிஸ்துராஜ் […]
