தமிழகத்தில் ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஆலோசனை பெறுவதற்காக உதவி எண்களை நாடலாம் என்று தொழிலாளர் நலத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் வேலைபார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில், அவர்கள் தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையிலும், அதற்குரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யவும், தொழிலாளர் துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை […]
