ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சுமார் 5,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடனை பகுதியில் இருக்கும் 47 ஊராட்சிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோடனூர் ஊராட்சி பகுதியில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதனையடுத்து இந்த பணிகள் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பொன்ராஜ் ஆலிவர் அவர்களின் உத்தரவின்படி தொடங்கியுள்ளது. இதனைத்தொடர்ந்து கோடனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆலம்பாடி காந்தி ஊராட்சியில் உள்ள டி.கிளியூர், ஆலம்பாடி கிராமங்களில் குறுங்காடுகள் […]
