பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன் ஆனைமலை அருகில் நடந்த விபத்தில் பைக் மோதியதில் 3 பேர் உயிரிழந்தார்கள். இந்நிலையில் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வருபவர்களிடம் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகனாந்தம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், அலுவலர்கள் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். […]
