குரோம்பேட்டையில் சுரங்கப்பாதை பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குரோம்பேட்டை ராதாநகர் ரயில்வே கேட் பகுதியில் பொதுமக்களின் வசதிக்கேற்ப இலகு ரக வாகன சுரங்கப்பாதை கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இந்தத் திட்டம் நிறைவு பெறாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இலகு ரக வாகன சுரங்கப்பாதை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. இதற்கு குரோம்பேட்டை, […]
