நாய் சேகர் படத்தில் இடம் பெற்றுள்ள நாய்க்கு பிரபல நடிகரின் குரல் பேசப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. காமெடி நடிகர் சதீஷ் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் பவித்ர லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் நாய் சேகர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் பிரவீன் ஒளிப்பதிவிலும் அஜீஷ் அசோக் இசையமைப்பிலும் உருவாகி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. […]
