தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையம் புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள புளியமரம் ஒன்றில் பத்துக்கும் மேற்பட்ட குரங்குகள் தங்கி உள்ளன. அந்த பகுதி மக்கள் அவ்வழியாக வரும்போது அவர்கள் கொடுக்கும் தின்பண்டங்களை வாங்கி தின்று அங்கேயே மரங்களில் தங்கி வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் சேட்டை நிறைந்த குரங்கு ஒன்று தன்னுடைய குரங்கு சேட்டையை காட்டியுள்ளது. மருத்துவமனைக்கு ஒருவர் கொண்டு வந்த பால் பாட்டிலை பிடுங்கிய குரங்கு […]
