ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிலகம் கிராமத்திற்கு அருகே வனப்பகுதியில்குட்டிகள் உட்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்கள் கண்டெடுக்கப்பட்ட அந்த கிராமத்தில் குரங்குகள் இல்லை என அப்பகுதியினர் தெரிவித்தனர். இதன் மூலம் வேறு இடத்தில் விஷமிகள் சிலர் விஷம் வைத்து அந்த குரங்குகளை கொன்று இருக்கலாம் என்றும் பின்னர் டிராக்டர் மூலம் அந்த குரங்குகளின் உடல்களை வீசி சென்று இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக விலங்குகள் நலச் […]
