ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிலகம் கிராமத்துக்கு அருகே வனப் பகுதியில் 40க்கும் அதிகமான குரங்குகள் இறந்து கிடந்தது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள், உடனே இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சம்பவ இடத்திலேயே இறந்தகுரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது. குட்டிகள் உட்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். […]
