கும்பம் ராசி அன்பர்களே..! இன்று சிலரால் உங்களுக்கு மன அமைதி குறையும். தீர்க்கமான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பணம் வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். வீட்டு விவகாரங்களை வெளியில் சொல்லாதிருப்பது ரொம்ப நல்லது. இன்று உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் ஏற்படும். வேலை பளு சற்று அதிகரித்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை நீங்கள் பெற முடியும் என்றாலும், கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் மிகவும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் பெற எடுக்கும் […]
