கும்பம் ராசி அன்பர்களே.! விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. இன்று கண்டிப்பாக எதையும் யோசித்து செய்ய வேண்டும். அவசரங்கள் வேண்டாம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினம் இருப்பதினால் காரியத்தில் கவனமாக ஈடுபடவேண்டும். எப்படியும் முடிந்துவிடும் என்று நினைத்த காரியம் முடியாமல் போகலாம். மனக்குழப்பங்கள் அதிகமாக இருக்கும். குடும்ப விஷயங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். உங்களுடைய செயல்பாடுகளை மற்றவர்கள் குறை சொல்லக்கூடும். அதனைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். சந்திராஷ்டமம் முடிந்த பிறகு மனக்குழப்பம் தீர்ந்து எல்லாம் சரியாகும். […]
