தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த மாதம் பெய்த கனமழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த அருவியில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட அதிக அளவில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். இங்கு புதுச்சேரியை சேர்ந்த காவலர் ஹரிஹரன் என்பவரும் தன்னுடைய குடும்பத்துடன் வந்துள்ளார். […]
