தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய வணிக நகரமாக திகழும் கும்பகோணம் கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. தொன்மையான சிவாலயங்களும், வைணவ ஆலயங்களும் அதிகளவில் அமைந்துள்ளன. கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். பித்தளை பாத்திரங்கள், குத்துவிளக்குகள், பஞ்சலோக விக்ரகங்கள் தயாரிக்கும் பணிகள் இங்கும் மேற்கொள்ளப்படுகின்றன. கும்பகோணத்தில் வெற்றிலையும், டிகிரி காபியும், பட்டு சேலைகளும் தனிசிறப்பு உடையவை ஆகும். கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி 7 முறையும், திமுக 6 முறையும், […]
