தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட 10 நபர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்புகையில் அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு (23ஆம் தேதி) உத்தமபாளையம் வட்டம் குமுளி மலைப்பாதையில் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இச்செய்தியை […]
