சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் குவியும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.50 கோடியில் 9 முடிவற்ற பணிகள் திறப்பு விழா நேற்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது. இதனை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “தமிழகம் முழுவதும் உள்ள […]
