சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பைகளை தரம் பிரிக்கும் போட்டி துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு, “என் குப்பை எனது பொறுப்பு”என்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் என்ற போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். அதன் பிறகு தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்த தனது புகைப்படங்களை இந்த போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டுஉறுதிமொழி […]
