குப்பைகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் மீண்டும் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பை கிடங்கில் கடந்த 18-ம் தேதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 2 நாட்களாக கடுமையாக போராடினார்கள். அதன்பிறகு நேற்று முன்தினம் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் நேற்று அதிகாலை மீண்டும் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு […]
