குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மீனா தனது வீட்டின் அருகில் இருக்கும் குப்பை தொட்டியில் குப்பை கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது குப்பைத் தொட்டியில் இருந்த பையில் பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் மீனா காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
