ஏர் மொரீஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத் தொட்டியில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி மடகாஸ்கரில் இருந்து வந்த ஏர் மொரிஷியஸ் விமானம் சர் சீவூசாகூர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்நிலையில் விமானம் நிலைய அதிகாரிகள் வழக்கமான சுங்க சோதனைக்காக விமானத்தை சோதனை செய்த போது அதில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் […]
