சென்னை மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருந்து தினமும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இதில் தென்னை, மரக்கழிவுகள் போன்ற தோட்ட கழிவுகளானது நார்கள் மற்றும் பயோ உருளைகளாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதேபோல பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுகளாக கட்டப்பட்டு மறுசுழற்சியாளர்களிடம் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு எரிபொருளாக கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள கடைகளில் எளிதில் தரம் பிரிக்கும் விதமாக மக்கும் குப்பை, மக்காத குப்பை […]
