அரசு ஊழியர் வீட்டில் இரவு வேளையில் மட்டும் பூக்கும் மலரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் குமரன்-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஆவர். இவர்கள் தங்களுடைய வீட்டின் வெளிப்புறத்தில் பல வகையான பூ செடிகளை வளர்த்து வருகின்றனர். இவற்றில் பிரம்ம கமலம் எனும் அறியவகை […]
