கோவில் குத்துவிளக்குகளை கொள்ளையடித்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அருமனை அருகே களியல் வைகுண்டம் பகுதியில் முத்துக்காவு திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருந்த 18 குத்துவிளக்குகளை மர்ம நபர்கள் சிலர் கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து கடையல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வெள்ளறடை பகுதியில் இருக்கும் பாத்திர கடையில் 2 பேர் குத்துவிளக்குகளை விற்பனை செய்வதற்காக காத்துக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் […]
