குடும்பத்தகராறு காரணமாக மகனை தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவி கடலூரிலும், இரண்டாவது மனைவி புதுச்சேரியில் அவருடன் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு மனைவி என்பதால் அடிக்கடி குடும்பத்தில் சண்டை வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சண்டை வந்தபோது இரண்டாவது மனைவியின் […]
