திராவிட கட்சிகளின் உதவியால் பணக்காரர்களாக வாழ்ந்துகொண்டு ஓட்டுகளை மட்டும் பாஜகவுக்கு போட்டு இருக்கிறீர்கள் என சென்னையில் வாழும் வட இந்தியர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு புட்டு வைத்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருப்பவர் வடசென்னையை சேர்ந்த சேகர்பாபு. துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவை எதிர்த்து பாஜகவின் வினோஜ் செல்வம் போட்டியிட்டார். வாக்குப்பதிவு அன்று தொகுதிக்கு தொடர்பில்லாத வட இந்தியர்கள் பலர் துறைமுகம் தொகுதியில் ஓட்டு போட சென்றபோது அங்கிருந்த […]
