இந்து சமய அறநிலையத்துறை அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அமைச்சர் சேகர் பாபு கோவில்களின் வாடகைதாரர்கள் இணையவழியில் சுலபமாக வாடகை செலுத்தும் வசதியை தொடங்கி வைத்துள்ளார். இணைய வழியில் வாடகை செலுத்த இயலாதவர்கள் வழக்கம்போல் வாடகை தொகையை கோவில் அலுவலகத்தில் செலுத்தி கம்ப்யூட்டர் வாயிலாக ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும் தற்போது குத்தகை, வாடகை தொகையை காசோலை வாயிலாக செலுத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் வாடகைதாரர்கள் வங்கி கணக்கில் காசோலைக்குரிய தொகை இல்லையெனில் குற்றவியல் […]
