பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குஸ்தர் மாவட்டத்தில் சந்தை ஓன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்போது பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பான பாகிஸ்தான் […]
