கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சிங்கமுகதீர்த்தம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சூர்யா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் பழனி என்பவரை கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இருவரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் […]
