கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் அருகில் உள்ள வல்லம் கிராமத்தில் சக்திவேல் (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் புறம்போக்கு இடத்தில் தனக்கு பட்டா கொடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த மாதம் 7-ந் தேதி வல்லம் ரேஷன் கடை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குமாரசாமியை பொக்லைன் எந்திரத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து குமாரசாமி போலீசில் […]
